இந்தியா

நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் நீட்டிப்பு

ENS


புது தில்லி: வெளிநாடு சென்று மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வில் பெறும்  மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் பயன்பாட்டுக் காலம் ஓராண்டாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் வைத்த பரிந்துரைக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் தேர்வை எழுதிய ஆண்டிலேயே ஏதோ ஒரு காரணத்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்களுக்கு மத்திய அரசின் இந்த சலுகை பெரிய அளவுக்கு உதவும். 

இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி இந்தியாவில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT