தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், அங்கு செல்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியில் சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT