தமிழ்நாடு

நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

DIN

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையே ஆதாரம். பருவமழை பெய்யாததால், இந்த அருவிக்கு நீர்வரத்து அடியோடு நின்றிருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்கிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு அண்மையில் நீர்வரத்து ஏற்பட்டது. புதன்கிழமை நீர் வரத்து மேலும் அதிகரித்து, கம்பித் தடுப்பைத் தாண்டி அருவி நீர் பாய்ந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், சீரான நீர்வரத்து ஏற்படும் வரை தாற்காலிகமாக அருவி மூடப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT