தமிழ்நாடு

கொடைக்கானலுக்குக் கிளம்பிட்டீங்களா.. ஒரே கொண்டாட்டம்தான்!

DIN

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகளும்,  விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

எனவே, இங்கே மழையில்லாமல் வறண்ட வானிலையாக இருக்கிறதே என்று கவலையோடு கொடைக்கானல் கிளம்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு மழை சிறப்பான வரவேற்பு அளித்துள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரலும், மிதமான மழையும் பெய்தது. அதிலும் கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானல், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. 

இது, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்டவைகளின் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாரல் மழையிலும் படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மேக மூட்டமும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கடந்த 2 நாள்களாக வாரவிடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மேகமூட்டமும், சாரலும் நிலவி வந்தது. 
இந்த சூழ்நிலையில் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. 

இந்த மழையால் பொது மக்களும் ,சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.  நீரோடைகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.  இதனால் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மேலும் கொடைக்கானல் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருந்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையின் காரணமாக நீரோடைப் பகுதிகளிலும், நீர்வரத்து பகுதிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சற்று குடிநீர் பிரச்னை குறைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT