அடர் சிவப்பில் சந்திரன் PTI
தமிழ்நாடு

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் தொடங்கியது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. திங்கள்கிழமை அதிகாலை 1.25 மணியளவில் சந்திர கிரகணம் முடிவடைகிறது.

இதில், கிட்டத்தட்ட 85 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

மேலும், இதேபோன்ற ஒரு சந்திர கிரகணத்தைக் காண வேண்டும் என்றால் அது 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை வீட்டிலிருந்தே மக்கள் வெறும் கண்களாலும் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT