டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் ஆயுதங்கள் கேட்கும் உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் இன்று (திங்கள்கிழமை) கலந்து கொண்டு உக்ரைனுக்கு அதிக ஆயதங்கள் வழங்குமாறும், ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் இன்று (திங்கள்கிழமை) கலந்து கொண்டு உக்ரைனுக்கு அதிக ஆயதங்கள் வழங்குமாறும், ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
காணொளி வாயிலாக பேசிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறியதாவது, “ கீவ் ரஷியாவினால் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கப்படும் போது உரிய நேரத்தில் ஆயதங்களைப் பெற்றிருந்தால் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அதன் காரணத்தினால் தான் உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதே போல ரஷியாவிலிருந்து பெறப்படும் எரிபொருள்கள் மற்றும் அதன் வங்கிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். ரஷியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். மேலும், உலக நாடுகள் ரஷியாவுடன் எந்த விதமான வர்த்தகமும் மேற்கொள்ளக் கூடாது” என்றார்.
டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பான விஷயங்கள் அதிக அளவில் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.