மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி தனது ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேரை திரட்டி திமுகவில் இணைத்தார். இருப்பினும், கட்சி தாவல் நடவடிக்கை பாயும் என்ற காரணத்தால் இதுவரை திமுகவில் அவர் இணையவில்லை.
வெளியில் இருந்தபடி திமுக நிர்வாகிபோல் செயல்பட்டு வரும் அவர், தனது ஆதரவாளர்களில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்காக திமுக ஆதரவுடன் பனியன், டையிங் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தையும் (எல்பிஎஃப்), பெண் ஆதரவாளர்களுக்காக 250 மகளிர் சுய உதவிக்குழுக்களையும் துவக்கினார். அதில், திமுக உயர்மட்டத்தை ஈர்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை வழிநடத்த கருணாநிதியின் தாயார் பெயரில் அஞ்சுகம் அம்மையார் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தையும் ஏற்படுத்தினார்.
முறைப்படி கட்சிக்குள் இணைவதற்குள்ளாகவே தனக்கென தொழிலாளர்கள், பெண்கள் பலத்தை கூட்டுவது திருப்பூர் திமுக வட்டாரத்தில் புகைச்சலை அதிகரித்துள்ளது. அதுவே, சமீபத்தில் மகளிர் சுய உதவிக்குழு துவக்க விழாவிலும், அஞ்சுகம் அம்மையார் பெண்கள் மேம்பாட்டுக் கழக அலுவலக துவக்க விழாவிலும் வெளிப்பட்டது. சுய உதவிக்குழு துவக்க விழாவில் அமைச்சர்கள் கீதாஜீவன், மு.பெ.சாமிநாதன் பங்கேற்காமல் தவிர்த்ததும், அஞ்சுகம் அம்மையார் பெண்கள் மேம்பாட்டுக் கழக அலுவலக துவக்க விழாவை அமைச்சர் சாமிநாதன் தவிர்த்ததும் அதை உறுதிப்படுத்தியது.
இருப்பினும், சொந்த மாவட்ட உள்கட்சி விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் தலைமையின் ஆதரவை மிகைப்படுத்திடவும், உள்ளூரில் தனக்கான மக்கள் பலத்தை கூட்டிக்கொள்ளவும் இலவச பட்டா, நலவாரிய பணிகள் உள்ளிட்ட பொது நல சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் கோவிந்தசாமி எம்எல்ஏ. கழகக் கரை வேட்டி கட்டிவிட்டால்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.