சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று நடக்கிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும் என்பது குறித்து, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா பொது வாழ்க்கைக்கு வரும் முன்பே, சினிமா மூலம் கணிசமாக வருவாய் ஈட்டியவர். அவருக்கு ரூ.113.73 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையக்கூடிய சொத்துக்கள் மதிப்பு ரூ.41.63 கோடியாகும். அசையாத சொத்துக்கள் மதிப்பு ரூ.72.09 கோடியாகும். ரூ.2.04 கோடி கடன் இருப்பதாகவும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் கொடநாடு சொத்து சசிகலா நடராஜனுக்கும், போயஸ் கார்டன் இல்லம், இளவரசியின் மகன் விவேக் கிற்கும் செல்ல உள்ளதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.