முதல்வர் ஜெயலலிதா

ஓலமிட்டு அழுகின்றோம்: எம். ஜெயராமசர்மா

DIN
       ஜெயமென்னும் பெயர்கொண்டு        ஜெயித்துவந்த ஜெயாவம்மா       ஜெயாமுதல்வர் பதவியுடன்       ஜீவனையே கொடுத்துவிட்டார்       ஜெகமதனில் ஜெயிப்பதற்கு       ஜெயலலிதா ஆகிநின்றார்       ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்       ஜெயாவம்மா வாழுகிறார் !        துணிவுகொண்ட பெண்ணானார்        துயர்பலவும் தான்கண்டார்        தனிமையிலே தவித்தாலும்        தமிழ்நாட்டை நினைத்துநின்றார்         அமுதான தமிழோடு        ஆங்கிலமும் பேசிநின்றார்        அதிமுகாவினது ஆணிவேராய்        அவர் இருந்தார் !        அஞ்சாமல் ஆட்சிசெய்த        அம்மாவைக் காண்பதெப்போ        அவருடைய துணிவான        அழகுதமிழ் கேட்பதெப்போ         புன்சிரிப்பு பூத்துநிற்கும்        பூமுகத்தைக காண்பதெப்போ         புகழ்பூத்த பெண்மணியே        உனைக்காணா அழுகின்றோம் !        ஆளுமைமிக்க அரசியல் தலைவியே        ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை        போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை         காலனைவென்றிடும்  வல்லமை இழந்ததேன் !           உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா           உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே           என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்           உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT