மொழிவாரியான பிரிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இருக்கும் அனைத்துவிதமான கல்வி மையங்களின் எண்ணிக்கை 2,566. அவற்றில் பெங்காலி மொழி பள்ளிகள் 1098, ஹிந்திப் பள்ளிகள் 375, சமஸ்கிருதப் பள்ளிகள் 353, பாரசீகப் பள்ளிகள் 694, அரபு மொழிப் பள்ளி 31, ஆங்கிலம் 8. மிட்னப்பூரில் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளின் பட்டியலும் தரப்பட்டிருக்கிறது. 548 பெங்காலிப் பள்ளிகள், 182 ஒரியப் பள்ளிகள், 48 பாரசீகப் பள்ளிகள் மற்றும் ஒரே ஒரு ஆங்கிலப் பள்ளி. அட்டவணை 11-ல் மாவட்டவாரியான தரவுகள் இடம்பெற்றுள்ளன.
அட்டவணை 11 : பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் வகை
பள்ளி | முர் | பீர் | பர்த் | தென் | திரி | ஆய்வு | மிட் |
| வங் காள மொழி | 62 | 407 | 629 |
|
| 1098 | 548 |
ஹிந்தி | 5 | 5 |
| 285 | 80 | 375 |
|
ஒரியா | - |
|
|
|
|
| 182 |
| சமஸ் கிருதம் | 24 | 56 | 190 | 27 | 56 | 353 |
|
பார | 17 | 71 | 93 | 279 | 234 | 694 | 48 |
அரபு | 2 | 2 | 11 | 12 | 4 | 31 |
|
ஆங் | 2 | 2 | 3 | 1 |
| 8 | 1 |
பெண் | 1 | 1 | 4 |
|
| 6 |
|
குழந் |
|
|
|
|
| 1 |
|
மொத் | 113 | 544 | 931 | 604 | 374 | 2,556 | 779 |
பள்ளிக் கல்வியின் நான்கு நிலைகள்
ஆரம்பப் பள்ளிக் கல்வியின் கால அளவை ஆடம் நான்காகப் பிரித்திருக்கிறார். முதல் கட்டம், சுமார் பத்து நாள்கள். இதில் குழந்தைகள் மணலில் அல்லது மண் சிலேட்டில் மூங்கில் குச்சியால் அகர வரிசை எழுத்துகளை எழுதிப் படிக்கிறார்கள்.
இரண்டாவது கட்டம், இரண்டரை ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகள் நீடிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் எழுதுவதற்குப் பனை ஓலை பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தரப்படுகிறது. 100 வரையிலான எண்கள், நில அளவை அலகுகள் ஆகியவை மனனம் செய்யக் கற்றுத் தரப்படுகிறது. மூன்றாவது காலகட்டம், இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் நீடிக்கிறது. இதில் வாழை இலையில் எழுதப் படிக்கக் கற்றுத் தரப்பட்டது. கூட்டல், கழித்தல் பிற கணித விதிகள் கற்றுத் தரப்பட்டன. நான்காவதும் கடைசியுமான காலகட்டம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. இதில் காகிதத்தில் எழுதிப் படித்தனர். ராமாயணம், மானஸ மங்கள் ஆகியவை வாசிக்கக் கற்றுத் தரப்பட்டன. கணக்கு வழக்குகள், கடிதங்கள், விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் எழுதுதல் ஆகியவை கற்றுத் தரப்பட்டன. அட்டவணை 12-ல் மாணவர்களின் எண்ணிக்கையும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளும் இடம்பெற்றிருக்கின்றன.
அட்டவணை 12
| பயன்படுத்திய பொருள்கள் | மாணவர்களின் எண்ணிக்கை | ||||
| முர்ஷிதா பாத் | பீர்போம் | பர்த்வான் | தென் பிஹார் | திரிகூடம் | |
| முதல் கட்டம் தரை, சிலேட்டு | 71 | 372 | 702 | 1,560 | 250 |
| இரண்டாம் கட்டம் பனை ஓலை, மரப் பலகை | 525 35 | 3,551 19 | 7,113 | 1,503 | 172 |
| மூன்றாம் கட்டம் வாழை இலை சால் இலை வெண்கல தட்டு | 3 9 | 299 98 | 2,765 | 42 | 55 |
| நான்காம் கட்டம் காகிதம் | 437 | 2,044 | 2,610 | 39 | 30 |
| மொத்தம் | 1080 | 6,383 | 13,190 | 3,144 | 507 |
அனைத்து சாதியினருக்கும் ஆரம்பக் கல்வி
எடுத்த எடுப்பிலேயே நம் கவனத்தைக் கவரும் விஷயம் என்னவென்றால், மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாம் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காயஸ்தர்கள், பிராமணர்கள், சதகோப், அகுரி பிரிவினர் அதிகமாக இருக்கிறார்கள். எனினும் 30 பிற சாதிகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையினர் இருந்திருக்கிறார்கள். சந்தால் சாதியைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்றிருப்பதாகவே சொல்லலாம். பிராமணர்கள், காய்ஸ்தர்களின் எண்ணிக்கை 40%க்கு அதிகமில்லை. பிஹாரின் இரண்டு மாவட்டங்களில் அவர்களின் எண்ணிக்கை 15--16% க்கு அதிகமில்லை. பர்த்வான் மாவட்டத்தில் 126 வைத்ய மாணவர்கள் இருந்தனர். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் தாம் (61), சந்தால் (61) சாதி மாணவர்கள் கணிசமான அளவில் கல்வி பெற்றிருக்கிறார்கள். பர்த்வானில் 13 கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதில் சந்தால், தாம் சாதி மாணவர்கள் வெறும் நான்கு பேரே இருந்திருக்கிறார்கள். ‘ஒட்டுமொத்தமாக 16 தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த 86 மாணவர்கள் மட்டுமே மிஷனரி பள்ளிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சாதிகளைச் சேர்ந்த 674 பேர் இந்திய பாரம்பரியப் பள்ளிகளில் கல்வி பயின்றிருக்கிறார்கள்’ என்று ஆடம் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
கணக்குப் பாடங்கள்
ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரையில் அதில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு புத்தகங்கள் பற்றி ஆடம் குறிப்பிட்டிருக்கிறார். இவை மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டிருக்கின்றன. ஆனால், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் 14 கிறிஸ்தவப் பள்ளிகள் நீங்கலாக பிற அனைத்து பள்ளிகளிலும் கணக்கியல் (அக்கவுண்ட்ஸ்) கற்றுத் தரப்பட்டுள்ளது. வணிகக் கணக்குகள், விவசாயக் கணக்குகள் ஆகிய இரண்டும் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அட்டவணை 13 மாவட்டவாரியான விவரங்களைத் தருகிறது.
கணக்கு வகை
பள்ளியில் சேர்க்கும் வயது 5லிருந்து எட்டுவரை இருந்திருக்கிறது. பள்ளி முடித்துச் செல்லும் வயது 13லிருந்து 16.5 ஆக இருந்தன.
சம்ஸ்கிருத கல்வி மையங்கள்
ஆய்வு மேற்கொண்ட மாவட்டங்களில் இருந்த மொத்த 353 பள்ளிகளில் அதிகபட்சமாக பர்த்வானில் இருக்கும் 190 பள்ளிகளிலும் (1358 மாணவர்கள்) குறைந்தபட்சமாக தென் பிஹாரில் 27 பள்ளிகளிலும் (437 மாணவர்கள்) சம்ஸ்கிருதம் கற்றுத் தரப்பட்டுள்ளன. மொத்தம் இருந்த சம்ஸ்கிருத ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்களே. ஐந்து பேர் வைத்ய சாதியைச் சேர்ந்தவர்கள். இலக்கணம் (1424 மாணவர்கள்) தர்க்கம் (378 மாணவர்கள்), சட்டம் (336 மாணவர்கள்), இலக்கியம் (120 மாணவர்கள்) ஆகியவை கற்றுத் தரப்பட்டுள்ளன. இறையியல் (82 மாணவர்கள்), வான சாஸ்திரம் (78 மாணவர்கள்), மொழியியல் (48 மாணவர்கள்), சொல்லாட்சிக் கலை (19 மாணவர்கள்), மருத்துவம் (18 மாணவர்கள்), வேதாந்தம் (13 மாணவர்கள்), தந்தரம் (14 மாணவர்கள்), மீமாம்ஸா (2 மாணவர்கள்), சாங்கியம் (1 மாணவர்) ஆகியவையும் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. கல்விக்கான கால அளவு, ஆரம்ப வயது ஆகியவை எல்லாம் என்ன பாடம் படிக்கிறார்கள் என்பதற்கு ஏற்பவும் மாவட்டத்துக்கு மாவட்டமும் மாறுபட்டிருந்தன.
இலக்கணம் படிக்கும் மாணவர்கள் சிறிய வயதிலேயே அதாவது 9-12 வயதிலேயே ஆரம்பித்துவிட்டனர். சட்டம், புராணவியல், தந்த்ரம் போன்றவை 20 வயதுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக ஏழு முதல் 15 வருடங்கள் கல்வி கற்றிருக்கிறார்கள்.
பாரசீகம் மற்றும் அரபு மொழிக் கல்வி மையங்கள்
பாரசீக மொழி கற்றவர்களின் எண்ணிக்கை 3,479. அவர்களில்1,424 பேர் தென் பிஹாரில் படித்திருக்கிறார்கள். இந்தக் கல்வியை உயர் கல்வியாகக் கருதாமல் தனியான பாடமாகவே ஆடம் கருதியிருக்கிறார். இந்தப் படிப்புக்கான பள்ளிகளில் சேரும் வயது 6.8லிருந்து 10.3 ஆக இருந்திருக்கிறது. கல்வியின் கால அளவு 11-15 வருடங்கள் இருந்திருக்கிறது. பாரசீக மொழி பயில்பவர்களில் பாதிபேர் இந்துக்கள், அதிலும் காயஸ்தர்களே பெரும்பான்மையாக இருந்திருக்கின்றனர்!
அரபு மொழி படித்த 175 மாணவர்களில் முஸ்லிம்களே அதிகமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், 14 காயஸ்தர்கள், ஒரு அகுரி, 1 தெலி, ஒரு பிராமணர் ஆகியோரும் அரபு மொழி கற்றிருக்கிறார்கள். பாரசீக மொழிக் கல்வியில் ஏராளமான புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டனர். அரபு மொழி பயின்றவர்களும் கணிசமான அளவு புத்தகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆசிரியர்களின் வயதைப் பொறுத்தவரையில் எல்லாவகைப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பெரிதும் 30-40 வயதினராகவே இருந்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.