கிச்சன் கார்னர்

தக்காளி ஜவ்வரிசி வற்றல்

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

தவநிதி

தேவையான பொருட்கள்:

தக்காளி - 5

ஜவ்வரிசி - ஒரு கிண்ணம்

இஞ்சிச் சாறு - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - ஒன்று

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து,  ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். இந்தக் கலவையை  ஆறியதும் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக்  பேப்பர் அல்லது சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி காயவிடவும். நன்றாக காய்ந்த பிறகு எடுத்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

இதே முறையில் புதினாவிலும் செய்யலாம். பச்சைநிறத்தில் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT