தேவையான பொருள்கள்
தக்காளி – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்துமல்லி – சிறிதளவு
துவரம் பருப்பு – ஒரு கப்
கடுகு – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மிளகு – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ரசப்பொடி தயாரிக்கவும். (வாணலியில் துவரம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கிக் கொள்ள வேண்டும்).
தக்காளி விழுது மற்றும் இரண்டு தக்காளியை தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, கடுகை தாளித்து, தயாராக உள்ள தக்காளி விழுது, மஞ்சள் தூள், உப்பு மற்றும் ரசப் பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு தயாராக உள்ள வேகவைத்த, மசித்த துவரம் பருப்பு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, கொத்துமல்லியைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு
இதில் நறுமணம் கூடுதலாக இருக்க, தேங்காய் பால் சேர்க்கலாம். ரசப் பொடிக்கு வறுக்கும் போதும் சீரகத்தை கடைசியாகச் சேர்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.