தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – 100 கிராம்
தேங்காய் – 1
உடைத்த கடலை – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 10 கிராம்
பச்சைப் பட்டாணி – 1 சிறிய பாக்கெட்
பச்சை மிளகாய் – 3
பீன்ஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
காலிஃப்ளவர் – ¼ கிலோ
முருங்கைக்காய் – 2
எலுமிச்சை – ½
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி – தேவையான அளவு
இஞ்சி – 50 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் பாசிப்பருப்பை வறுத்து, உலர வைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
தேங்காயை அரைத்து மூன்று விதமான பால் எடுத்துக் கொள்ளவும் (முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பால்).
இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றுக்கு இரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு, வேகவைத்த பட்டாணி, பின்னர் நீளவாக்கில் வெட்டி வைத்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், மற்றும் கேரட் சேர்த்து, வதக்கி அதன்பின் காலிஃப்ளவர் மற்றும் முருங்கைக்காய் அத்துடன் மூன்றாவது தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.
பின்னர் தயாரித்து வைத்துள்ள இரண்டாவது தேங்காய் பாலைச் சேர்க்கவும். பினனர் வேக வைத்துள்ள பாசிப் பருப்பை சேர்த்து கிளறி, ஒன்றுக்கு இரண்டாக அரைத்து வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து கறிவேப்பிலை மற்றும் முதல் பால் மற்றும் மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறுதியில் எலுமிச்சை சாரை பிழிந்து இறக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய்யில் சீரகம் போட்டு தாளித்து மேலே தயாரித்து வைத்துள்ள குழம்புடன் சேர்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.