முகப்பு
சைவ வகைகள்

மல்லி புதினா எள் சட்னி

தேவையானவைகொத்துமல்லி – 2 கைப்பிடிபுதினா – 2 கைப்பிடிஎள் – 2 டீஸ்பூன்

Updated On : 5 நவம்பர், 2015 at 1:14 PM
பகிர்:

தேவையானவை

கொத்துமல்லி – 2 கைப்பிடி

புதினா – 2 கைப்பிடி

Advertisement

எள் – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்

தேங்காய் – 2 துண்டு

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – 3

பச்சை மிளகாய் – 1

எண்ணெய் –தேவைக்கேற்ப

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலில் ½ டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளத்தம்பருப்பை போட்டு வறுக்கவும்.

இஞ்சி, பூண்டு, ஒரு சிறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு புதினா சேர்த்து வதக்கவும்.

அடுப்பை அணைத்த பிறகு, கொத்துமல்லி, தேங்காய், உப்பு சேர்த்து அந்தச் சூட்டில் வதக்கவும்.

இதனை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து போட்டு தாளித்தபின் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.