சைவ வகைகள்

தினை அரிசி பனீர் வெஜிடபிள் ஊத்தப்பம்

தினை அரிசி – 1 கப்வரகு அரிசி – 1 கப்புழுங்கல் அரிசி – 1 கப்

லட்சுமி ராமன்

தேவையானவை

தினை அரிசி – 1 கப்

வரகு அரிசி – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

உளுந்தம் பருப்பு – 1 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

(இவற்றை நாலு மணி நேரம் ஊற வைத்து தோசைப் பதத்திற்கு அரைத்து வைக்கவும்)

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

மிளகு சீரகம் பொடி செய்தது -1 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

இஞ்சி – 1 சிறிய துண்டு

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு

புதினா – ஒரு கைப்பிடி (வதக்கி எடுத்து மாவில் கலக்கவும்)

கொத்துமல்லி – ஒரு கைப்பிடி

கேரட் – 1

முட்டைகோஸ் – 50 கிராம்

வெங்காயம் – 2

(பொடியாக நறுக்கி வாணலியில் சிறிதளவு எண்னெய்விட்டு நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்)

உப்பு - தேவைக்கேற்ப

மூன்று மணி நேரம் கழித்ததும்

செய்முறை

தோசைக் கல் எடுத்து, சிறிது எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்துக் கொஞ்சம் கெட்டியாக ஊற்றவும். அதன் மேல் கேரட், முட்டை கோஸ் கலவை 2 டீஸ்பூன் தூவவும். துருவிய பனீர் சேர்த்து வேக விடவும் (இரண்டு பக்கம் நன்கு வேகவேண்டும்)

எண்ணெய் வேண்டாம் எனில், தோசையை மூடி போட்டு ஆவியில் வேக வைக்கவும்.

எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்தான உணவு இது. ரத்தத்தில் சர்க்கையின் அளவைக் குறைக்கும். நிறைய ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்து நிறைந்த உணவு இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT