சைவ வகைகள்

உருளைக்கிழங்கு மொச்சை கரம் மசாலா

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அதில் வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

ஹேமலதா

தேவையானவை:

வேக வைத்த உருளைக் கிழங்கு - 3
வேகவைத்த மொச்சை - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
புளி கரைசல் - கால் கிண்ணம்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அதில் வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

பின்பு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், உருளைக் கிழங்கு, மொச்சை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, கரம் மசாலா சேர்க்கவும்.

கடைசியாகப்  புளி கரைசல் சேர்த்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கொத்துமல்லி தூவி இறக்கவும். உருளைக் கிழங்கு மொச்சை கரம் மசாலா ரெடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT