முகப்பு
சைவ வகைகள்

ராகி - முருங்கைக்கீரை அடை

செய்முறை: ராகி மாவில் நறுக்கிய வெங்காயம்,  கிள்ளிய மிளகாய்வற்றல், சுத்தம் செய்த முருங்கைக் கீரை, உப்பு

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:12 PM
பகிர்:

தேவையானவை:

கேழ்வரகு (ராகி) மாவு - 1 கிண்ணம்

முருங்கைக் கீரை - 1/2 கிண்ணம்

வெங்காயம் - 1

மிளகாய் வற்றல் - 2

உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப

நல்லெண்ணெய்  சிறிதளவு.

செய்முறை: ராகி மாவில் நறுக்கிய வெங்காயம்,  கிள்ளிய மிளகாய்வற்றல், சுத்தம் செய்த முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து  கொள்ளவும். பிறகு ஒரு தட்டின் பின்பகுதியில் மெல்லிய காட்டன் துணியைப் போட்டு அதன்மீது பிசைந்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு  உருண்டைகளாக எடுத்து தட்டி. தோசைக்கல்லில் இட்டு, சுற்றிலும் நல்லெண்ணெய்யை விட்டு  மறுபக்கம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

பலன்கள்: கேழ்வரகில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு அடர்த்தி குறைதல், ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவர, உடல்நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.