சைவ வகைகள்

வெஜிட்டபுள் இட்லி

செய்முறை: பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, கேரட் -பீன்ஸ் அனைத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தவநிதி

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்

பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - 1/2 கிண்ணம்

உருளை கிழங்கு - 2 (பெரியது)

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, கேரட் -பீன்ஸ் அனைத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு,

சீரகம் தாளித்து பின்னர் வேகவைத்துள்ள காய்கறி கலவையைச் சேர்த்துப் பிரட்டி விட்டு, அரை உப்பு சேர்த்து கிளறவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து   காய்கறி

மசாலாவை ஒரு தேக்கரண்டி எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான வெஜிட்டபுள் இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT