சைவ வகைகள்

கோதுமை தக்காளிச் சாதம்

செய்முறை: சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அரைலிட்டர் தண்ணீரில்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

சம்பா ரவை - 1/4 கிலோ

வெங்காயம் - 100 கி

 தக்காளி - 1/4 கி

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

உப்பு, எண்ணெய் - தேவையானது

செய்முறை: சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அரைலிட்டர் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய் வதக்கி நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்துத் தண்ணீர்வற்றும் வரை வதக்கி வெந்த சம்பாரவையைக் கலந்து கிளற வேண்டும்.  மேலே பொடியாக அரிந்த கொத்துமல்லி இலையை தூவிச் சாப்பிடலாம்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT