சைவ வகைகள்

கோதுமை பருப்பு அடை

செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

உடைத்த கோதுமை - கால் கிலோ

கடலைப் பருப்பு - 50 கி

உளுத்தம் பருப்பு - 50 கி

துவரம் பருப்பு - 50 கி

வெங்காயம் - 100 கி

காய்ந்த மிளகாய் - 5

இஞ்சி - அரைத் துண்டு

தயிர் - 50 கிராம்

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையானது.

செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க  வேண்டும். எல்லா பருப்புகளையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் மசியாதவாறு அரைக்க வேண்டும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு மாவாக தயார் செய்ய வேண்டும்.  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அடையாக பரப்பி எண்ணெய் ஊற்றி வெந்தெடுக்க வேண்டும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT