சைவ வகைகள்

வாழைப்பூ கட்லெட்

செய்முறை: வாழைப்பூவை ஒரு  பாத்திரத்தில் அரிந்து போட்டு புளியை தண்ணீர் விட்டு கரைத்து வாழைப்பூவை

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

 பெரிய வாழைப்பூ - 1

 வெந்த உருளைக்கிழங்கு - 2

கடலை மாவு - 1 தேக்கரண்டி

 பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 6

புளி - 1 சிறு உருண்டை

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு, எண்ணெய் -  தேவையானது

செய்முறை: வாழைப்பூவை ஒரு  பாத்திரத்தில் அரிந்து போட்டு புளியை தண்ணீர் விட்டு கரைத்து வாழைப்பூவை அரிந்து வைத்ததில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். மசித்த உருளைக் கிழங்கு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் முதலிய எல்லாவற்றையும் போட்டு நன்றாகப்  பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT