சைவ வகைகள்

ராகி ரவா தோசை

DIN

தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1கிண்ணம்
கோதுமை மாவு - ணீ கிண்ணம்
அரிசி மாவு - ணீ கிண்ணம்
ரவை - ணீ கிண்ணம்
சீரகம் - 1- அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 3 வித மாவுகள், சீரகம், உப்பு ஆகியவை சேர்த்து சற்று நீர்க்க மாவு கரைத்து சுமார் 1 மணி நேரம் மூடி வைக்கவும். தோசைக் கல்லை நன்கு சூடாக்கவும். கல் நல்ல சூட்டில் இல்லா விட்டால், தோசை சரியாக வராது.

ரவா தோசை செய்வது போல், ஓரத்திலிருந்து மாவு ஊற்ற ஆரம்பித்து, நடுவில் வந்து முடிக்க வேண்டும்.  சூட்டைக் குறைத்து, மிதமான சூட்டில், பொறுமையாகச் செய்தால் சுவையான மொறுமொறுப்பான ராகி ரவா தோசை கிடைக்கும். பலவித சத்துக்கள் நிறைந்த இந்த ராகி ரவா தோசையை, பச்சைக் கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: சிறு தானியங்களின் ராணி என்று அழைக்கலாம் ராகி அல்லது கேழ்வரகை.  கால்ஷியம் சத்து நிறைந்திருப்பதால், ஆஸ்டியோபொராஸிஸ் நோய் நம்மை நெருங்கவே நடுங்கும். இதிலுள்ள  இரும்புச் சத்து, ரத்த சோகையைப் போக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

SCROLL FOR NEXT