சைவ வகைகள்

முடக்கத்தான் தோசை

DIN

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
முடக்கத்தான் இலைகள் - 4 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: 

முடக்கத்தான் இலைகளை அலம்பி, வடிகட்டி, இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3 மணிநேரம் ஊற வைத்து அரைக்கவும். 15 நிமிடங்கள் அரைத்ததும், கீரை விழுதையும் சேர்க்கவும். நன்கு அரைத்து சுமார் 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். ஒரு துளி எண்ணெய் விட்டு தோசை வார்த்தெடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.


குறிப்பு: முடக்கு அற்றான் கீரை என்ற பெயரே இதன் தன்மைகளை விளக்குகிறது.  முடக்கு வாதத்தை, வலிகளை போக்கக் கூடியது. மிகச் சுலபமாக வீட்டில் வளரக் கூடியது. எல்லா கீரை கடைகளில் கிடைக்கக் கூடியது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தக் கீரையை பயன்படுத்தி வாத நோய் நம்மை அண்ட விடாமல் செய்வோமாக. காம்புகளை விலக்கி விட்டு இலைகளை உருவி உபயோகிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

SCROLL FOR NEXT