சைவ வகைகள்

உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி

ராதா சுதர்ஸன்

தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து தனியாக வைக்கவும். பின்னர், வாணலியில்  எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு தாளிக்கவும்.

பின்னர், பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம், தோல் நீக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ளவும். பின்னர், கோதுமை மாவை சிறிது எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.

பிறகு மாவை உருட்டி சின்னதாக இட்டு நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து, மாவை எல்லா பக்கமும் மடித்து மிகவும் அழுத்தாமல்  லேசாக தேய்த்து  சாப்பாத்தியாக சுட்டு எடுக்கவும். எல்லாபக்கமும் எண்ணெய் சிறிது விட்டு குறைந்த தீயில் திருப்பிப் போட்டு எடுத்து வைக்கவும். சுவையான  உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரெடி.

குறிப்பு: இதற்கு வெங்காயம், வெள்ளரி தயிர் பச்சடி, தக்காளியில் செய்த கொத்ஸு (மிளகாய் வற்றல், கடுகு, வெங்காயம் அல்லது பெருங்காயம்,சிறிது மஞ்சள் பொடி, உப்பு,சேர்த்து எண்ணெய் அதிகம் விட்டு சுருள வதக்கி வைத்தால், இதற்கும்,சாப்பாட்டிற்கும் சேர்த்துக் கொள்ளலாம், கெடாது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT