சைவ வகைகள்

பலாக் கொட்டை, வாழைத்தண்டு பருப்புக் குழம்பு

பலாக் கொட்டைகள் மேல் தோல்

ராதா சுதர்ஸன்

தேவையானவை:
பலாக் கொட்டை - தேவைக்கேற்ப
வாழைத்தண்டு - 1 துண்டு
புளி - எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு, வெந்தயம், பெருங்காயம் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 1
சம்பார் பொடி - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது

செய்முறை:

பலாக் கொட்டைகள் மேல் தோல் எடுத்து ஒரு தட்டு தட்டி வைத்துக் கொண்டு, வாழைத்தண்டு நார் எடுத்து வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

புளியுடன் உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு, வாழைத்தண்டு, பலாக்கொட்டையுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து, கீறின பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் புளிக் கரைசல் சேர்க்கவும்.

அத்துடன் சாம்பார் பொடி சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்கவிடவும். புளி, பொடி வாசனை போய் குழம்பு மணம் வரும்போது வேக வைத்த பருப்பு வாழைத்தண்டு, பலாக்கொட்டையை சேர்த்து அடி பிடிக்காமல் ஒரு கொதிவிடவும்.  

பின்னர், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். நீர்க்க இருந்தால் 1தேக்கரண்டி அரிசி மாவு கரைத்து விடலாம். சுவையான பலாக் கொட்டை, வாழைத்தண்டு பருப்புக் குழம்பு ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT