முகப்பு
சைவ வகைகள்

சிம்பிள் கேரட் குருமா

கேரட் கண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு காய்கறி. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:16 PM
பகிர்:

கேரட் கண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு காய்கறி. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.

தேவையான பொருள்கள்:
கேரட் - அரை கிலோ (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தேங்காய் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
ஏலக்காய் - 2
இலவங்கம் - 2
பட்டை - 1 துண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில்  துண்டுகளாக நறுக்கிய கேரட்டை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சைமிளகாய், கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், இலவங்கம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், வேக வைத்துள்ள  கேரட், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விட வேண்டும்.  இப்போது சூப்பரான கேரட் குருமா ரெடி. இதனை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.