சைவ வகைகள்

கருப்பு உளுந்து வடை

நா.நாச்சாள்

தேவையானவை:
கருப்பு உளுந்தம் பருப்பு - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் -  1
இஞ்சி, பெருங்காயம்,
கறிவேப்பிலை, மல்லி, தட்டிய மிளகு - சிறிதளவு
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: தோல் சேர்ந்த கருப்பு உளுந்தம் பருப்பை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின் சிறிது பெருங்காயம் சேர்த்து பொங்க ஆட்டி தேவையான உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சிறிது, கறிவேப்பிலை, மல்லி, தட்டிய மிளகு இவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.

 வாணலியில் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்யைக் காய வைத்து இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்துத் தட்டி நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையைப் போட்டு, வடைக் கம்பியால் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான கருப்பு உளுந்து வடை தயார். மாவில் 1 மேஜைக் கரண்டி அரிசிமாவு கலந்து சுட்டால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் சத்தான மாலை சிற்றுண்டி. குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்றது.
காட்டுயானம் அவல் பாயசம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT