சினிமா எக்ஸ்பிரஸ்

மற்றவை நேரில்

‘மற்றவை நேரில்’ படப்படிப்பு நடந்த இடம் அடையாறு – மாளவியா அவின்யூவில் உள்ள ஒரு நாகரிக வீடு. பொன்மலர்

உமா ஷக்தி.

‘மற்றவை நேரில்’ படப்படிப்பு நடந்த இடம் அடையாறு – மாளவியா அவின்யூவில் உள்ள ஒரு நாகரிக வீடு. பொன்மலர் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் கலைஞர்களில் விஜயன், ஜெயதேவி, ஜோதி, நித்யா, பாஸ்கர், ஷியாம் சுந்தர் போன்றோர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் எஸ்.என்.லெட்சுமி முதலானோரும் இதில் உண்டு.

கலைஞர்கள் அனைவருமே ஜெயதேவியைத் தவிர, ஸ்லைட் டச்சப் மேக்கப்புடன் நடித்துக் கொண்டிருந்தனர். ஜெயதேவியிடம் காரணம் கேட்டேன். ‘இந்தப் படத்தில் எல்லோரும் ஸ்லைட் டச்சப்தான்’ என்றார். ஜெயதேவி இந்தப் படத்தில் விஜயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

குடும்பங்களில் உள்ள எண்ணப் போராட்டங்களை பிரச்னைகளாக வைத்துக் கதை உரையாடலை எழுதி டைரக்ட் செய்து வருகிறார் மெளலி. இவருக்கு மற்றவரை நேரில் இரண்டாவது படம்.

இந்த வண்ணப்படத்தை காலம் சென்ற பாடும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் குமாரர் சுகுமாரும் தமிழரசியும் கூட்டாகத் தயாரிக்கின்றனர்.

தந்தைக்குப் பிறகு தன் குடும்பத்திற்கும் கலைக்கும் உள்ள தொடர்பு விட்டுவிடக் கூடாது என்பதற்காகப் படத் தயாரிப்பில் இறங்கிவிட்டதாகக் கூறினார் சுகுமார்.

பாடல்களை கண்ணதாசனும் இசையை ஷியாமும் அமைத்திருக்க, பிரபாகர் கேமராவை இயக்குகிறார். இவர் இன்ஸ்டிட்யூட்டில் பயின்றவர்.

‘மற்றவை நேரில்’ படப்பிடிப்பை நேரில் பார்த்தபோது அங்கு இளம் துடிப்பைக் காண முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT