சினிமா எக்ஸ்பிரஸ்

தானாகவே நகர்ந்த கார்!!!

மதுமலர் படத்திற்காக லொகேஷன் பார்க்க ஏற்காடு போயிருந்தோம்.

கவியோகி வேதம்

மதுமலர் படத்திற்காக லொகேஷன் பார்க்க ஏற்காடு போயிருந்தோம். பர்வீன்ஸ், ஒளிப்பதிவாளர் சேகர் ஆகியோர் எங்களோடு வந்திருந்தார்கள்.  காலையில் புறப்பட்டு நாங்கள் பிடித்தமான இடம் அமையாததால் ஏற்காடு மலைப்பகுதியையே சல்லடை போட ஆரம்பித்து விட்டோம். 

மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் கார் போய்க்  கொண்டு இருந்தது. அப்போது மாலை 5 மணியிருக்கும். எங்கள் கண்களுக்கு பள்ளத்தாக்கில் கோயில் ஒன்று இருப்பது போல் தென்பட்டது. காரை நிறுத்தி  விட்டு பள்ளத்தாக்கில் இறங்கி  நடக்கத் தொடங்கினோம்.

அந்தக் கோயில் ரொம்ப நேரத்திற்குப் பின் தென்பட்டது. மனித நடமாட்டம் என்றால் அது நாங்களாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அமைதி அங்கே  குடி கொண்டிருந்தது.

கோயிலுக்குச் சென்றால் அதை  விட அமைதி தென்பட்டது. சுற்றுப்புற சூழ்நிலையை பார்க்கும் போது  மனது திகில் அடைது.

திடீரென்று மலை உச்சியில் நிறுத்தபட்டிருந்த எங்கள் கார் தானாகவே நகர ஆரம்பித்தது. ஒரே ஓட்டம்தான் எல்லாரும் உச்சிக்கு ஓடினோம். அப்பவும் கார்  ட்ரைவர் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. இந்தஇடம் பேய்   நடமாட்டம் உள்ள பகுதி என்று பர்வீன்ஸ் சொல்ல எங்கள் பயம் மேலும் அதிகரித்தது.

கார் அருகே சென்ற போதுதான் 'நியூட்ரல்' ஸ்லோப்பில் விட்டு விட்டார்கள் என்று தெரிய வந்தது. ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு தப்பித்தோம்.  பின்னார் விசாரித்த போது , "சனிக்கிழமைதான் அந்தக் கோயிலில் பூஜை நடக்கும், கோயிலைத் தாண்டி யாரும் போக மாட்டார்கள். நீங்கள் போனது அதிசயம் என்று சொன்னார்கள்.மறக்க முடியாத அனுபவம் இது.

பேட்டி: மு.சிவாஜி.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT