சினிமா எக்ஸ்பிரஸ்

நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகரா? சிவாஜி ரசிகரா?

ரஜினிகாந்த் பதில்கள் !

கவியோகி வேதம்

01.11.81

க.மு.திலீப்குமார், தங்கவயல்

வெற்றிநாயகரே! நீங்கள் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனமெழுதும்  படத்தில் நடிக்க வேண்டுமென்ற என் ஆசை நிறைவேறுமா?

அத்தகைய வாய்ப்பு உருவாகி எனக்கு ஏற்ற கேரக்டர் கிடைத்தால் தாராளமாக நடிப்பேன்.

&&&&&&

ஏ .ராஜேந்திரன், பேச்சம்பள்ளி

உங்கள் திருமணத்திற்கு வந்தவர்களை  ஏன் அடித்து அனுப்பினீர்கள் ? 

யாரையும்  நான் அடிக்கவில்லை.

&&&&&

மு.சுப்ரமணியன், தேவக்கோட்டை

திரை உலகில்  வெளிபடையாக பேசிப் பழகுகிற  உங்களை, உலகம் பிழைக்கத் தெரியாதவன் என்று கூறுகிறதே ?

தான் வாழ்வதோடு மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் பிழைக்கத தெரியாதவன் என்றால், நான் பிழைக்கத்  தெரியாதவனாகவே இருந்து விட்டுப்  போகிறேன்.  

&&&&&

`சிவாஜி கணேஷ், கோயம்புத்தூர்

நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகரா? சிவாஜி ரசிகரா?

நான் 'ரஜினி' ரசிகன் 

&&&&&&

ஆர்.செந்தூர் பாண்டியன், சென்னை -19

ரசிகர்கள் உங்களை புறக்கணித்து விடுவார்கள் என்ற பயம் உங்களுக்கு உண்டுதானே?

ஓரிரு ஆண்டுகளில் நானே திரைப்படத்துறையை புறக்கணித்து விடுவேன் என்ற பயம் எனக்கே உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT