சினிமா எக்ஸ்பிரஸ்

என்னோட கனவிலே கூட குதிரைதான் வரும்

மவுண்ட் ரோட்டில் குதிரை சவாரி செய்தேன் - பிரபு

கவியோகி வேதம்

என்னோட அப்பா கிண்டி ரேஸ் க்ளப் மெம்பர். ஓய்வு கிடைக்கறப்ப எல்லாம் குதிரை மேல் ஏறி கிண்டி ராஜ் பவனை சுத்தி ஓட்டிகிட்டே இருப்பாரு.  "படித்தால் மட்டும்போதுமா?" படத்தில வர்ற "ஓஹோஹோ மனிதர்களே" பாடல் காட்சில ஹார்ஸ் ரைட் பண்ணிருக்கார். அதனால் சின்ன வயசுல இருந்து குதிரை மேல கொள்ளைப்பிரியம் எனக்கு. குதிரை லாயத்துக்கெல்லாம் போய் அதைக் குளிப்பாட்டுவேன். அதோட சாணத்தை எடுத்துப் போடுவேன். எங்க வீட்டுலயே ரெண்டு குதிரை வைச்சிருந்தோம். என் சித்தப்பா பசங்க ரெண்டு பெரும் நானும் சேர்ந்து எப்பவும் அந்த குதிரை கூடவே இருப்போம். இப்போ அந்த குதிரைகள் இல்லே. அப்பா அந்த ரெண்டு குதிரையையும் தன்னோட பிரண்டுக்கு பிரசண்ட் பண்ணிட்டாரு. சின்ன வயசுல நான் முறையா ரைடிங் கத்துக்கல. ரெண்டு வருசமா குதிரை சவாரி கத்துக்கிட்டு வரேன். ரைடிங் கிளப்புலயும் மெம்பர் ஆகிட்டேன்.

கொஞ்ச காலத்துக்கு முன்னால கமல், விஜயகுமார், பாரதிராஜா இவங்க எல்லாரும் விடிய காலம்பற பீச்சுக்கு வந்துவிடுவாங்க. நானும் போவேன். கொஞ்ச தூரம் ரன்னிங் பிராக்டீஸ் எடுத்து முடிச்சதும், ஹார்ஸ் ரைட் போவோம்.இப்ப அதுக்கெல்லாம் டைம் இருக்கறதில்ல.

குதிரை மேல இருக்குற எக்கசக்க ஈடுபாட்டினால என்னோட கனவிலே கூட குதிரைதான் வரும்.  ஒரு கனவுல மக்கள் வெள்ளத்துக்கு இடையில ஹார்ஸ் ரைட் செய்திருக்கேன். தேவர் பிலிம்ஸ் வெள்ளைக் குதிரையை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"எல்லாரும் ஹார்ஸ்ட் ரைடிங் பண்ண இளைச்சிருவாங்க ..ஆனா உன் விஷயத்துல எவ்வளவுதான் குதிரை சவாரி பண்ணுனாலும் குதிரைதான் இளைச்சுப்போகுதே தவிர நீ அப்படியேதான் இருக்க" அப்டின்னு அப்பா கலாட்டா பண்ணுவாரு.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.83 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT