சினிமா எக்ஸ்பிரஸ்

சிறந்த நடிகை சரிதா!

சிறந்த கதாநாயகிகளுக்கு தமிழ் திரை உலகில் என்றென்றும் பஞ்சம் இருந்ததில்லை அ. டி.ஆர்.ராஜகுமாரி

உமா ஷக்தி.

சிறந்த கதாநாயகிகளுக்கு தமிழ் திரை உலகில் என்றென்றும் பஞ்சம் இருந்ததில்லை அ. டி.ஆர்.ராஜகுமாரி காலத்திலிருந்து இக்காலம் வரை தனக்கென்று தனித் தன்மையை உருவாகிக் கொண்டு நடிப்புலகில் கொடி கட்டிப் பறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். மறைந்த பி.கண்ணாம்பாவைப் போல ஒரு குணசித்திர நடிகையை நாம் பெறவே முடியாது. நடிப்பின் சரித்தரித்தில் ஒரு புத்தேடு புரட்டியவர்கள் -  பட உலகுக்குப் பெறுமை சேர்த்தவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள்.

அண்மைக் கால வரலாற்றில் பி.பானுமதி, அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்திரி, செளகார் ஜானகி, சரோஜா தேவி போன்றவர்களின் சாதனை மகத்தானது. பி.பானுமதி அவர்களை நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டினார்.

இளைய தலைமுறையினரில் சுஜாதா, லட்சுமி, போன்றவர்கள், நடிப்பில் மக்களின் கவனத்தை கவர்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். பலமுறை இவர்களை ‘சிறந்த நடிகை’ என்ற பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் சரிதா இப்போது இடம் பெற்றிருக்கிறார்.

ஆர்.செல்வராஜ் அவர்களால், ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சரிதா டைரக்டர் கே.பாலசந்தரின் ‘தப்புத் தாளங்கள்’ படத்தின் மூலமாக புகழேணியில் ஏறத் தொடங்கி படிப்படியாக நடிப்புத் திறமையால் பிரகாசித்து இன்றூ சிறந்த நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அண்மையில் வெளியான ‘மெளன கீதங்கள்’ படம் சரிதாவின் சிறந்த நடிப்புக்கு சீரிய சான்றாக விளங்குகிறது.

‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வாசகர்கள் 1980 ஆம் ஆண்டில் சிறந்த நடிகையாக பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். (விவேகானந்தா பிக்சர்சாரின் ‘வண்டிச் சக்கரம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்ஆக என்பது பெரும்பாலான வாசக அன்பர்களின் தீர்ப்பு) இந்தத் தேர்வும் தீர்ப்பும் முற்றிலும் பொருத்தமானதே என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

சினிமா எக்ஸ்பிரஸ் சிறந்த நடிகை (1980) சரிதா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

-மூர்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT