01.07.81
எம்.கனி, மதுரை - 9
சூப்பர் ஸ்டார் அவர்களே! சிவகுமார் உங்களை பற்றி ஒரு ஹீரோவின் நடிப்பிலக்கணத்தை மாற்றியவர் என்று கூறி இருப்பது பற்றி?
ஹீரோவின் நடிப்பிலக்கணத்தையே மாற்றியதாக நான் நினைக்கவில்லை. ஒரு வேளை அபப்டி மாற்றியிருந்தால், அதற்காக நான் பெருமைப்படுகின்றேன்.
&&&&&
ப.மூர்த்தி, பெங்களூர்-21
தங்களின் பலம், பலவீனம் எது?
பலம்: பிடிவாதம்; பல்வீனம்: முன் கோபம்
&&&&&
15.07.81
ஏ .மும்தாஜ், போளூர்
தாங்கள் நடித்த பாத்திரங்களில் உங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரம் எது?
"ஆறிலிருந்து அறுபது வரை" படத்தில் நான் ஏற்றிருந்த கதாபாத்திரம்
&&&&&
சு.பரமேஷ் (சாணார்பட்டி), திண்டுக்கல்
கடவுள் உங்கள் முன்னால் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் என்ன வரம், கேட்பீர்கள் ?
"இறைவா, காலத்தை ஒரு நூறு வருடம் பின்னால் தள்ளி விடு" என்ற வரத்தைக் கேட்பேன்.
&&&&&
என். மாலதி, ராயபுரம், சென்னை - 13
நீங்கள் முதலமைச்சரானால் நாட்டுக்கு என்ன நன்மை செய்வீர்கள்?
முதலமைச்சராகாமலேயே நாட்டுக்கு நன்மை செய்ய முடியாதா என்ன?
&&&&&
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.