சினிமா எக்ஸ்பிரஸ்

நெஞ்சத்தைக் கிள்ளாதே

ஆரம்பித்துச் சிறிது நேரத்திலேயே பதிந்து விடுகிறது, ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் முத்திரை. சுஹாசினி

உமா ஷக்தி.

ஆரம்பித்துச் சிறிது நேரத்திலேயே பதிந்து விடுகிறது, ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் முத்திரை. சுஹாசினி ஓடும்போது நாமும் சேர்ந்து ஓடுவது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது அவரது ஒளிப்பதிவு.

அடுத்தாற் போன்று, அதே ஓட்டப்பந்தயக் காட்சியில் அடையாளம் தெரியாமல் டைரக்டர் மகேந்திரன், விஜியுடன் (சுஹாசினி) ரிவர்சில் ஓடுகின்ற ராம் (மோகன்) பின்னால் ஜகா வாங்கப் போவதைச் சொல்லாமல் சொல்லியிருப்பது நயம்.

அந்தக் காட்சியில் பி.ஜி.எம்மில் ‘பருவமே புதிய பாடல்’ பாடுவது புதுமையாக இருந்தாலும் அவர்களது காலடிச் சத்தமும் கால்களும் இணையவில்லையே? (போனால் போகிறது அதுதான் அவர்களது மனங்கள் இணைந்துவிட்டனவே)

இணைந்த மனங்கள், இடையே பிளவுபடுகின்ற பழைய சமாச்சாரம்தான் கதை. இருந்தாலும் எடுக்கப்பட்ட முறையில் மாற்றம் தெரிகிறது.

இந்தப் படத்தில் சுஹாசினியை அறிமுகப்படுத்தியுள்ள டைரக்டர் மகேந்திரன் படாபட்டின் கேப்பையும், ஃபில்-அப் செய்திருக்கிறார்.

இரக்கப்பட வைக்கிறார்கள் சரத்பாபுவும் பிரதாப்பும்.

மோகனுக்கு சோகம் கொஞ்சம் போதாது. கமலை போன்று கவர்ச்சி இருக்கிறது. ஆனால் அது பற்றாதே.

இதமான கிள்ளல்.

-கேயெம்மெஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! கரூரில் 8.45 லட்சம் பேர்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

SCROLL FOR NEXT