சினிமா எக்ஸ்பிரஸ்

கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் நான் - கண்ணதாசன்

நானும் கருணாநிதியும் சினிமாவின் மூலம் நண்பர்களானவர்கள் தான். அரசியல் தொடர்பு பின்னால் வந்தது.

உமா ஷக்தி.

நானும் கருணாநிதியும் சினிமாவின் மூலம் நண்பர்களானவர்கள் தான். அரசியல் தொடர்பு பின்னால் வந்தது. நாங்கள் பழகியது மாதிரி யாரும் பழகி இருக்கவும் மாட்டார்கள். எங்களுக்குள் பகை வந்த மாதிரி யாருக்கும் வந்திருக்காது.

அவரும் பல கட்டங்களில் சினிமாக்காரராகவே நடந்து கொண்டார். முன்பு ‘இல்லற ஜோதி’ படத்திற்உ எழுதும் போதே அவர் அந்த உருவத்தைத்தான் காட்டினார்.

டால்மியாபுரம் போராட்டத்தில் பிடிபட்ட மறுநாளே, அவர் ஆறுமாதம் தண்டிக்கப்படு ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் கலவர வழக்கில் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் ‘இல்லறஜோதி’ சந்தர்ப்பம் கிடைத்தது. எழுதிய வசனங்களை ரகசியாம சிறைச்சாலைக்குள் அனுப்பி வைத்தேன். அந்த பைலை பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார்.

அதுதான் எங்கள் பகைமையின் ஆரம்பம் போல் இன்று தோன்றுகிறது.

பழகிய மரியாதைக்காகத்தானே அவருடைய பார்வைக்கு அனுப்பினேன்? நன்றாய் இருக்கிறது; இல்லை என்றாவது குறிப்பாவது எழுதியிருக்கலாம் அல்லவா?

பத்திரிகைத் துறையிலும் எங்கள் போட்டி வளர ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் மனவேறுபாடு இருந்ததால் எம்.ஜி.ஆர். எனக்கு வெகுவாக ஊக்கம் கொடுத்தார். சொல்லப் போனால் எனக்கு அதிகமான தொகை கிடைப்பதற்குக் கூட ஏற்பாடு செய்தார். ‘மதுரை வீரனை’ போட்டுப் பார்த்த போதெல்லாம் மனம் திறந்து பாராட்டினார்.

‘மன்னாதி மன்னனுக்கு’ நான் எழுதிய காலம் பொன்னான காலம், அதைத் தயாரித்த திரு.எம்,நடேசன், படங்களுக்கு துணிமணி தைப்பவராக இருந்து முன்னேறியவர். போதுமான அளவு திரைப்பட அனுபவம் உள்ளவர். என்னை ‘டேய்’ என்று அழைப்பவர்களுள் அவரும் ஒருவர். நானும் ‘டேய் நடேசா’ என்று தான் கூப்பிடுவேன்.

‘மன்னாதி மன்னன்’ கதையையே நான் சொல்லித்தான் அவர் தேர்ந்தெடுத்தார்.

மதுரை வீரன் அபார வெற்றியடைந்ததும், தனது நாடோடி மன்னன் கதையையும் என்னிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.

இந்தக் காலங்களில் வசனம் எழுத என்னைப் பணித்தவர்கள் பெரும்பாலும் பாட்டெழுத என்னை அனுமதித்ததில்லை.  முதன்முதலில் பாட்டெழுதும் பொறுப்பையும் சேர்த்துக் கொடுத்தவர் திரு.எம்.நடேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! கரூரில் 8.45 லட்சம் பேர்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

SCROLL FOR NEXT