சினிமா எக்ஸ்பிரஸ்

சினிமா உலகைப் புரிந்து கொண்டேன்

‘ஒரு தலை ராகம்’ படத்தினால் அறிமுகமாகி ’வசந்த அழைப்புகளை’ வழங்கி, ‘ரயில் பயணங்களில்’ ஈடுபடுத்திக்

உமா ஷக்தி.

‘ஒரு தலை ராகம்’ படத்தினால் அறிமுகமாகி ’வசந்த அழைப்புகளை’ வழங்கி, ‘ரயில் பயணங்களில்’ ஈடுபடுத்திக் கொண்டுள்ள இளம் டைரக்டர் டி.ராஜேந்தரிடம் ‘சினிமா உலகைப் பற்றி இதுவரை நீங்கள் புரிந்து கொண்டது என்ன?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன ஒரு குட்டிக் கதை:

சின்னக் குழந்தை. தீபாவளி நேரம். அழகான ஒரு டெர்லின் சட்டை வாங்கிக் கொடு என்று குழந்தை அப்பாவைக் கேட்கிறது.

பட்டாஸ், மத்தாப்பும் வேணும் என்றும் ஆசைப்படுகிறது அந்தக் குழந்தை. சரி வாங்கித் தருகிறேன் என்று அப்பா ஒப்புக் கொள்லவே டெர்லின் சட்டையைப் பற்றியும், மத்தாப்பு வேடிக்கைகளைப் பற்றியும் அது ஆனந்தக் கனவு கண்டு கொண்டிருக்கிறது.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு ஆபிசுக்குப் போன அப்பாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது குழந்தை.

அதோ அப்பா வந்துவிட்டார்! ஆனால் கையில் எதுவும் காணோமே!

அப்பா! டெர்லின் சட்டை எங்கே? மத்தாப்பு எங்கே? குழந்தை பதட்டத்துடன் கேட்க, அப்பா சொன்னார், ‘அடுத்த தீபாவளிக்குப் பார்க்கலாம்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

SCROLL FOR NEXT