சினிமா எக்ஸ்பிரஸ்

சில பேர் சில வரிகள் - சிவகுமார்

உயரத்திலும் நிறத்திலுமுள்ள குறையை நடிப்பில் ஈடு செய்பவர். மின்னல் வேகத்தில் விஷயத்தை கிரகித்துக்

உமா ஷக்தி.

சரிதா

உயரத்திலும் நிறத்திலுமுள்ள குறையை நடிப்பில் ஈடு செய்பவர். மின்னல் வேகத்தில் விஷயத்தை கிரகித்துக் கொண்டு உணர்ச்சி வசப்பட்டு நடிப்பதில் இப்போதுள்ள இளைய தலைமுறை நடிகையரில் இவர் குறிப்பிடத் தக்கவர். கண்கள் இவருக்குப் பிரமாதமாகக் கை கொடுக்கின்றன. தன் பாத்திரம் மட்டும் படத்தில் சரியாக இருந்தால் போதுமென்று நினைக்கிறார். கூட நடிப்பவர்களைப் பற்றியும், படக் கதையைப் பற்றியும் தயாரிப்பாளரைப் பற்றியும் இவர் அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது.

ரதி

மன்மதனின் நாயகி இப்படித்தான் இருப்பாளோ என்று அழகிலே மலைக்க வைத்தவர். வசதியான குடும்பப் பின்னணி. நடிப்பில் இருக்கும் ஆர்வத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாதபடி குறுக்கே மொழிப் பிரச்னை. வடக்கே சென்று இந்திப் படங்களில் நடிக்கும் ஆர்வம் மிகுந்திருப்பதால் தென்னாட்டை மறந்து விடுவாரோ என்பதுதான் புதிய பிரசனை.

சிவசந்திரன்

படிப்பும் அடக்கமும் உண்டு. சீனியர்களை மதிக்கிற பண்பும் உண்டு. தயாரிப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறார். சதைப் பிடிப்பைக் கொஞ்சம் குறைக்க உடற் பயிற்சி செய்து, கதைப் பிடிப்பான பாத்திரத்தில் நடிக்க இன்னும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

SCROLL FOR NEXT