கிருஷ்ணன் சொன்ன ஸ்லோகங்கள் சிவாஜிராவின் மனசிலே இருக்கு. கிருஷ்ணனும் அவன் கூடவே இருக்கார்.
Yes, his manager’s name is Krishna Rao
கிருஷ்ணன் இருக்கும் போது, முரளி. தட் மீன்ஸ் புல்லாங்குழல் இல்லாமல் இருக்க முடியுமா?
அந்தப் பெயரிலும் ரஜினியின் கூடவே ஒருத்தர் இருக்கிறார்.
சிவாஜிராவ் இன்ஸ்டிடியூட்டிலே படிக்கிறபோது அடையாறிலே இப்ப உள்ள இன்ஸ்டிடியூட்னு மீன் பண்ணாதீங்க….ஃபிலிம் சேம்பரிலே நடந்த இன்ஸ்டிடியூட் – அங்கே ஃபர்ஸ்ட் குரூப்பிலே இருந்த 33 பேரிலே சிவாஜிராவும் ஒருத்தன்.
கன்னட செக்ஷனிலே இருந்தான். ஸ்டூடன்ஸ் என்கிற முறையில் எல்லோரும் ஃபிரண்ட்ஸ்தான்.
லன்ஞ் அவர்லேதான் குரூப் மனப்பான்மையே ஏற்படும். ‘விஜிட்டேரியன் என்வீன்னு ரெண்டு குரூப் – விஜிட்டேரியன்லேயும் எந்த ஹோட்டல் என்கிறதிலே ஒரு குரூப்!
சிவாஜிராவ் விஜிட்டேரியன்லே தவுசண்ட் லைட்ஸ் குரூப்!
வீக்லி டுவைஸ் ஆர் திரைஸ், அங்கே மோர்க் குழம்பு, அந்த நாளைக் கணக்குப் பண்ணி கரெக்டா அட்டெண்ட் பண்ணிடுவான் சிவாஜிராவ்.
He likes very much more Kulambu!
அந்த க்ரூப்ல விட்டல்னு ஒருத்தன் அவனுக்கு வீடு மெட்ராஸ்லயே இருந்தது. அவன் வீட்டுக்கு சிவாஜிராவ் போறதுண்டு. அவன் பேமிலிலே எல்லோரும் நல்லா பிகேவ் பண்ணுவாங்க.
இன்ஸ்டிட்யூட்டிலே கோர்ஸ் முடிஞ்சி கொஞ்ச காலம் வரை சிவாஜிராவ் அருண் ஹோட்டலில் தான் தங்கியிருந்தான். ரூமிலே அவனோட தங்கியிருந்த ஷேர் ஹோல்டர்ஸ்லாம் போனவுடனே சிவாஜிராவ் அம்போ! He was lonely.
அது மட்டுமல்லே, அவனுக்கு இருக்க ஒரு இடம் இல்லை.
இப்போ ரஜினிக்கு இருக்க ஏராளமான இடங்கள். Millions of fans have given their hearts for him.
சீஃப் கெஸ்டா தங்கள் வீட்டுக்கு ஏராளமான பேர் கூப்பிடறாங்க.
அது மட்டுமில்லே. To trap Rajini into their families. பொறிவச்சிப் பிடிச்சாவது தங்கள் குடும்பத்திலே ரஜினியை ஒருத்தனா ஆக்குறதுக்கு முயற்சியும் பண்ணாங்க!
அப்ப அவர் சாதாரண சிவாஜிராவ் ஆச்சே! விட்டலோட வீடுதான் அவனுக்குக் கிடைச்சது. புதுப்பேட்டை கார்டன் ஸ்ட்ரீட். நெம்பர் ஃபார்ட்டி ஒன். ‘பொல்லாதவன்’ ஷூட்டிங் நடக்கிற போது தான் போயஸ் கார்டன், நெம்பர் எயிட்டீனுக்கு சொந்த வீட்டிற்கு குடியேறினார்.
அந்த விட்டலோட பிரதர்தான் முரளி.
He is his friend, manager and well wisher.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். ஒரு சின்ன கிரவுட் வருது.
’வணக்கம் சார்’
‘வணக்கம்’
‘நாங்கள் எல்லாம் இதே பேட்டையைச் சேர்ந்தவங்கதான்…’
‘வெரிகுட் என்ன விசேஷம்?’
‘இங்கே இருக்கிற கோயிலைப் புதுப்பிக்கலாம்னு முயற்சி பண்றோம். அதுக்காக நிதி திரட்டி வர்றோம். பட்டியல் பாருங்க சார்…’
‘நோ…நோ டஸண்ட் மேட்டர். விஷயத்தைச் சொல்லுங்க.’
‘கோயில் திருப்பணிக்கு சாரும் உதவி செய்யணும்’
நீங்க நம்ம பேட்டையிலே இருக்கறீங்க?
‘ஓகே! இந்தாங்க…நீங்க போகலாம்..
நன்றிங்க…
டியர்ஸ்
They are faking…பேச்சிலேயே தெரியுது.
But, its ok!
சிவாஜிராவ் பலதரப்பட்டவர்களைக் கண்டு ஸ்டடி பண்ணினவன். அவனோட ஆரம்ப உத்யோகம் அப்படி. He was a bus conductor. 10, 33- நெம்பர் பஸ்களிலே அவன் டூட்டியிலே இருந்தவன். அவன் போன ரூட் ஸ்ரீநகர் டூ சிட்டி ரயில்வே ஸ்டேஷன்.
அந்த ரூட்டிலே அவன் சந்திக்காத காரெக்டர்களே கிடையாது. அது ரஜினி இப்போ பிக்சர்களுக்கும் சரி லைஃப்லயும் சரி யூஸ்புல்லா இருக்கு.
இன்ஸ்டிடியூட்டுக்கு மாதா மாதம் ஃபீஸ் கட்டி, எப்படி நடிக்கக் கூடாது என்று சிவாஜிராவ் தெரிஞ்சுக்கிட்டானா –
பஸ் கண்டக்டரா இருந்து அப்போ மாதா மாதம் ரூ.850 சம்பளம் வாங்கி, பலவிதமான காரெக்டர்களைப் புரிஞ்சுக்கிட்டார்னு சொல்லலாம்.
அந்தக் கேரக்டர்களில் எல்லாம் நடிக்கணும்னு ரஜினிக்கு ஆசை. சப்ஜெக்ட்டுகளும் டைரக்டர்களும் தான் அவருக்கு உதவி செய்யணும்.
ரஜினியோட ரசிகர்களுக்கு சில பத்திரிகை ரிப்போர்டர்களும் ஒரு கேள்வியை மனச் சங்கடத்துடன் என்னிடம் கேக்கறாங்க…
(இன்னும் வரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.