சினிமா எக்ஸ்பிரஸ்

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு! 

இன்ஸ்பிரேஷன் - சிவாஜி கணேசன் 

கவியோகி வேதம்

வாழ்க்கையில் நான் சந்தித்து பேசிப் பழகிய போது என்னைக் கவர்ந்த பலரது இன்ஸ்பிரேஷன் என் கதாபாத்திரங்களை முழுமை ஆக்கிக்கொள்ள பெருமளவில் உதவியது.

"திருவருட்ச் செல்வர்" படத்தில் எனது நடிப்பு காஞ்சிப்பெரியவர் அவர்களிடம் இருந்து பெற்ற  இன்ஸ்பிரேஷன் என்று என்னிடம் சிலர் சொனனார்கள். அந்த சமயத்தில்ப பெரியவரை நேரில் நெருங்கி நான் சந்தித்ததில்லை என்றாலும், அவருடன் இருந்த பலர் அவரைப்பற்றி என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார்கள்.  பெரியவர்களைப் பற்றி நூல்களில் படித்திருந்தேன்.  இவற்றை எல்லாம் மனதில் கொண்டிருந்ததால், அவற்றின் மூலம் கிடைத்த இன்ஸ்பிரேஷன் "திருவருட்ச் செல்வர்" படத்தில் உதவியிருக்கின்றன என்று நினைக்கிறேன்.    பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரியவர்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது, நண்பர்கள் சொன்னது மெத்தப் பொருத்தமானது என்பதை உணர்ந்தேன்.

"சம்பூர்ண ராமாயணம்" படத்தில் பாரதனாகத் தோன்றியுள்ளேன்.  ராமாயணத்தை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறுவனாக இருந்த பொழுதே அதில் என்னைக் கவர்ந்த பாத்திரம் பரதன். அப்போதே பரதன் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டான். "சம்பூர்ண ராமாயணம்" படப்பிபிடிப்பு முடிந்ததும் அதைப் பார்த்து விட்டு, என்னை வாழ்த்தி மூதறிஞர் ராஜாஜி அவர்கள், 'பரதன் வாழ்க, பரதன் வாழ்க' என்று கூறி  உணர்ச்சி வசப்பட்ட நிகழ்ச்சி இன்னமும் என் கண்ணில் காட்சியாகவே தெரிகிறது.     

வாழ்க்கையில் எனக்கு நல்ல அபூர்வமான சில நண்பர்கள் கிடைத்தார்கள்.சிலருடன் பேசும் பொழுது,பழகும் போது , அவர்களது பேச்சு, அசைவு, நடை, உடை, பாவனை, போன்றவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

'வியட்நாம் வீடு' படத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் திரு.நாராயணசாமி, 'கவுரவம்' படத்தில் டி .வி.எஸ்.கிருஷ்ணா (கிச்சு) ..இப்படி சொல்லலாம். 'ரங்கூன் ராதா' படத்தில் சார்லஸ் போயரின் இன்ஸ்பிரேஷன்.

இதைப்போல நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருப்பதாகவே  எண்ணுகிறேன். 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.11.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT