ஜெ .உஷா, திருப்பாதிரிப்புலியூர்
சிவக்குமார், கமல்ஹாசன் - இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒருவர் கவுண்டர்; மற்றொருவர் பிராமணர்.
&&&&&
ஜானகி, விருத்தாச்சலம்.
நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியானால் என்ன செய்வீர்கள்?
வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை இரண்டாக பிரித்து விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன்,.
&&&&
எஸ்.பி.ராமலிங்கம், பூதப்பாடி.
உங்களைப் போன்ற நடிகர்களால் எங்களுக்கு என்ன பயன்?
என்னால் இன்ன பலன் ஏற்படுமென்று நான் யாரிடமும் எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ! ஆனால் முடிந்ததை நிச்சயமாகச் செய்வேன். சுய விளம்பரத்திற்காக அல்ல. வாழ வைத்த மக்களுக்காக.
&&&&&&&
வி.விஜயபாஸ்கர். கோவை
நமது சென்சார் போர்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஹிப்போக்ராட்ஸ்.
&&&&&
கே.சுப்புலட்சுமி, கோவை-16
ரஜினி சார், சிவாஜிக்கு அடுத்தபடியாக நன்றாக நடிப்பவர் கமல்தான் என்று எம்.ஜி.ஆர் கூறி உள்ளாரே?
அது அவருடைய கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.