சினிமா எக்ஸ்பிரஸ்

வெளியூர் சரக்கு; வாய் திறந்தாலே இந்தியும் இங்கிலீஷும்தான்..!

நான் சந்தித்த நாயகிகள்-  ரதி - கே .பாக்யராஜ்.

கவியோகி வேதம்

நான் சந்தித்த நாயகிகள் - கே .பாக்யராஜ்

டைரக்டர் பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆக இருந்த என்னை, 'ஹீரோ' என்ற புதிய வார்ப்பில்  வார்த்தார் அவர்.

எனக்கு ஹீரோயினாக செலக்ட் செய்யப்பட்டவரும் ஒரு புதிய வார்ப்புதான்.அவர்தான் இன்று வடக்கே ரதி அக்னிஹோத்ரியாக அறிமுகமாயிருக்கும், 'ரத்தி' என்று சில தமிழ் பத்திரிக்கைகளால் திருத்தமாக எழுதப்படும் ரதி.

இன்று 'ஏக் துஜே கேலியேவில்' ஒரு கேலியே (சரித்திரம்)  படைத்திருக்கும், ரதி அன்று ஒருமாடல் கேர்ள். மாடர்னாகவும் இருந்தவர். 

வெளியூர் சரக்கு. வாய் திறந்தாலே இந்தியும் இங்கிலீஷும்தான். ரதியும் சரி; அவர் அம்மாவும் சரி, அப்பாவும் சரி. எல்லோருமே அப்படித்தான்.

எனக்கு முதன் முதலா ஹீரோவாக நடிக்கும் போது இருந்த பயத்தை விட ரதியோடு நடித்த பயம்தான் அதிகம், காரணம் லவ் சீன்களில் நான் கொங்குத் தமிழ் பேச, ரதி இங்கிலீஷும் இந்தியும் கலந்த புதிய தமிழ் பேச , ஷூட்டிங் பார்த்த அனைவரும் எங்களை பார்த்து சிரித்தும்; இன்று நான் 'ஹீரோ' ; ரதியும் 'ஹீரோயின்'

புதிய வார்ப்புகளுக்குப் பிறகு ரதியை இரண்டு வருடங்கள் கழித்து ஒரே ஒரு முறை சந்தித்ததோடு சரி. 'ஹலோ, ராஜன்'' என்றதோடு சரி. அதற்குப் பிறகு இன்னும் சந்திக்கவே இல்லை. .

நான் ரதியிடம் பேசியதை விட அவரது அம்மாவிடம் தான் அதிகம் பேசியிருக்கிறேன். நமது தமிழர் பண்பாடு அவரிடம் நிறையவே உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் 'ராஜன், நன்றாக இருக்கிறாயா? சாப்பிட்டாயா? ஓய்வு எடுத்துக் கொண்டாயா? என்று அக்கறையுடன் விசாரிப்பார்.  இன்றும் எனது தாயாரின் மரியாதையை அவருக்கு அளிக்கிறேன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT