சினிமா எக்ஸ்பிரஸ்

எனக்கு எப்போதுமே மேடையில் பேசுவதற்கு மிகவும் பயம்

கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - எம்.ஜி.ஆர் பற்றி ரஜினிகாந்த்

கவியோகி வேதம்

கமல் நூறாவது பட விழாவிற்கு சென்றிருந்தேன். விழா தொடங்கி விட்டார்கள்.   இந்த நிலையில் முன்னால்  சென்று சலசலப்பு ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அமைதியாக பின்னால அமர்ந்து விழாவை ரசிக்கவும், மக்கள் திலகத்தின் பேச்சைக் கேட்கவும் எண்ணினேன். ஒரு ஓரமாக பின்னால் அமர்ந்தேன்.

நான் வந்ததையும், பின்னால்  அமர்ந்ததையும் மேடையிலமர்ந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கவனித்து விட்டார். முன்னால் வந்து உட்காரும்படி சொல்லியனுப்பினார். அதன் பின்புதான் நான்  முன்னால் சென்று அமர்ந்தேன். எனக்கு எப்போதுமே மேடையில் பேசுவதற்கு மிகவும் பயம். என் பலகீனத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதற்கு நான் எப்போதும் தயங்குவதில்லை. இதைப் போலவே இன்னொரு நிகழச்சி.

சிறந்த நடிகர் நடிகையர்களுக்கு பரிசளிக்கும் விழா தமிழக அரசு சார்பில்  நடைபெற்றது. அந்த விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் எங்கேயோ அமர்ந்திருந்த என்னை   முதல்வர் எம்.ஜி.ஆர் பார்த்திருக்கிறார். பார்த்தது மட்டும் அல்ல, அன்று அவர் பேசும் பொழுது பாராட்டியும் பேசினார்.

'தனக்கு பரிசு கிடைத்தாலே பலர் விழாவிற்கு வருவதில்லை. மற்ற கலைஞர்களுக்கு பரிசளிக்கப்படுவதை கண்டு வாழ்த்துவதற்காகவும், விழாவை சிறப்பிப்பதற்காகவும் வந்துள்ள ரஜினிகாந்த் போன்றவர்களை வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்' என்று அவர் பேசும்போது குறிப்பிட்டார்.

அவருடைய கண்ககள் கூர்மையானது. இதயம் விசாலமானது என்பதை கண்டுகொள்ள  இந்த நிகழ்ச்சிகள் உதாரணமாக அமைந்தன. 
 
(சினிமா எக்ஸ்பிரஸ்  15.02.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT