சாலையை சீர் செய்ய வேண்டும்
மண்டலம்-2, வார்டு 19 மாத்தூர் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள 16-ஆவது தெரு குண்டும் குழியுமாக உள்ளது.
மண்டலம்-2, வார்டு 19 மாத்தூர் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள 16-ஆவது தெரு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைநீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.