போக்குவரத்து நெரிசல் குறையுமா?
கே.கே. நகர், கே.ஆர். ராமசாமி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:51 PM
கே.கே. நகர், கே.ஆர். ராமசாமி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் கோயில், பள்ளி, தண்ணீர்த் தொட்டிகள் உள்ளன. இரவு பகலாக தண்ணீர் லாரி போக்குவரத்தும் உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் இப்பிரச்னையைத் தீர்க்க முன்வரவேண்டும்.