நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பு "எ' பிளாக்கில் பல மாதங்களாக குடிநீருக்காக குடியிருப்பு வாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். நீர்த் தேக்கத் தொட்டிபழுதடைந்து பல மாதங்களாகியும் சீர்செய்யப்படாததால் பணம் கொடுத்து லாரி மூலம் நீரை வரவழைத்து பயன்படுத்தி வந்தனர். பொருளாதாரப் பிரச்சனையால் பணத்தை வசூலித்து வழங்குவதில் உள்ள குளறுபடிகளால் தவிக்கின்றனர்.மேலும் அப்பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாலையில் குறிப்பிட்ட நேரம் குடிநீர் வழங்குவதால் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிரந்தமான தீர்வுக்கு வழிகாண வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.