வேகத் தடை அமைக்க வேண்டும்
தாம்பரம் கிழக்கிலிருந்து மேடவாக்கம் கூட்ரோடு வரை செல்லும் சாலையில் வேகத்தடைகள் இல்லை.
தாம்பரம் கிழக்கிலிருந்து மேடவாக்கம் கூட்ரோடு வரை செல்லும் சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. குறிப்பாக இரு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்லும் சிலர் அதி வேகத்தில் செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்தச் சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.