முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 12 – திருச்சாழல் - 3

சிவபெருமானின் உடலின் ஒருபாகத்தில் மலைமகள் இருக்கிறாள், ஆனால், அவனுடைய சடையில் இன்னொருத்தி (கங்கை) நீர்வடிவில் பாய்வது ஏன்?

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.

81

பாடலின்பம்

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி

சலமுகத்தால் அவன் சடையில் பாயும்அது என்னேடீ!

சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணிஎல்லாம்

பிலமுகத்தே புகப் பாய்ந்து பெரும்கேடாம் சாழலோ.

*

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண்பால் உகந்தான், பெரும்பித்தன் காணேடீ!

பெண்பால் உகந்திலனேல், பேதாய், இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர்காண் சாழலோ.

பொருளின்பம்

ஒருத்தி: சிவபெருமானின் உடலின் ஒருபாகத்தில் மலைமகள் இருக்கிறாள், ஆனால், அவனுடைய சடையில் இன்னொருத்தி (கங்கை) நீர்வடிவில் பாய்வது ஏன்?

இன்னொருத்தி: அந்தக் கங்கை நீர்வடிவில் அவனுடைய சடையில் பாய்ந்து புகுந்துகொள்ளவில்லை என்றால், இந்த உலகத்தில் பாய்ந்திருப்பாள், அவளுடைய வேகத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் மொத்த உலகமும் பாதாளத்துக்குச் சென்றிருக்கும். அதிலிருந்து உலகைக் காக்கவே அவன் கங்கையைத் தன் சடையில் கொண்டுள்ளான்.

ஒருத்தி: தென் திசையில் உள்ள தில்லைச் சிற்றம்பலத்தில் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடும் சிவபெருமான், தன் உடலின் ஒரு பகுதியாக உமையம்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறான். ஏன்? அவன் பெண் பித்தனோ?

இன்னொருத்தி: பேதைப்பெண்ணே, அப்படி அவன் தன் உடலின் ஒரு பகுதியாக உமையம்மையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இந்தப் பெரிய நிலத்தில் வாழ்கிறவர்கள் வானுலகு சென்று, யோகநிலையைப் பெற்று மோட்சம் அடைந்துவிடுவார்கள். இவ்வுலகமும் உயிர்களும் தோன்றாது.

சொல்லின்பம்

சலம்: நீர்

தரணி: உலகம்

பிலமுகம்: பாதாளம்

உகந்து: மகிழ்ந்து

பேதாய்: பேதையே

இருநிலம்: பரந்த நிலம்

விண்பால்: விண்ணில்

யோகு: யோகநிலை

வீடுவர்: மறைந்துவிடுவார்கள்/ மோட்சநிலை அடைந்துவிடுவார்கள்

முழு கட்டுரையைப் படிக்க →