முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 77

மயில் விருத்தம், ஒன்பதாம் பாடலின் பொருளை இப்போது பார்ப்போம்.

Updated On : 11 டிசம்பர், 2015 at 2:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:11 PM

மயில் விருத்தம், ஒன்பதாம் பாடலின் பொருளை இப்போது பார்ப்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

Advertisement

சிகர தமனிய மேருகிரி ரசதகிரி நீலகிரி எனவும்  தமனிய: பொன்மயமான; ரசத (rajata) வெள்ளிமயமான
ஆயிரமுகத் தெய்வநதி காளிந்தி என நீழல் இட்டு வெண்திங்கள்சங்கு எனவும்  ஆயிரமுகத் தெய்வநதி: கங்கை; காளிந்தி: யமுனை; நீழல், நிழல்: ஒளி என்றும் பொருள்
ப்ரபா நிகர் எனவும் எழுதரிய நேமி என உலகடைய நின்ற மாமுகில் என்னவே ப்ரபா: பிரபை, திருவாசி. எழுதரிய: ஓவியத்தில் தீட்ட அரிதான; நேமி: சக்கரம்
நெடிய முது ககன முகடு உற வீசி நிமிரும் ஒரு நீலக் கலாப மயிலாம் நீண்ட, தொன்மையான அண்டத்தின் உச்சி; கலாபம்: தோகை
அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள் அடியவர்கள் மிடி அகலவே அகரு: அகில்; மரு: மருக்கொழுந்து; அபிராம: பேரழகன்; வேள்: உதவுபவன்; மிடி: வறுமை
அடல் வேல் கரத்து அசைய ஆறிரு புயங்களில் அலங்கல் குழாம் அசையவே அடல்: வலிய, அலங்கல்: மாலை; அசைய: விளங்க

மகர கன கோமளம் குண்டலம் பல அசைய வல் அவுணர் மனம் அசைய

மகரமீன் வடிவில் செய்யப்பட்ட கனமான குண்டலங்கள்; கோமளம்: அழகிய; அவுணர்: அரக்கர். முதல் அசைய: விளங்க; அடுத்த அசைய: நடுங்க
மால் வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய வையாளி ஏறு மயிலே. மால்: பெரிய, உரகபிலம்: நாகலோகம்; வையாளி: குதிரையை ஒத்த ஒய்யார நடை.

தமனிய சிகர மேருகிரி... பொன்மயமான சிகரங்களைக் கொண்டமேரு மலையைப் போலவும்,

ரசதகிரி ... ரஜதம்—வெள்ளி; வெள்ளியங்கிரி எனப்படும் கைலாச மலையைப் போலவும்,

நீலகிரி ... நீலோத்பலங்கள் பூத்திருக்கும் தணிகை மலையைப் போலவும்

(பற்பல நிறங்களைக் கொண்ட தன் தோகையை விரித்து பிரமாண்டமாக நிற்கிறது. ஆனால் மலைகள் உயர்ந்து கம்பீரமாக நிற்கின்றன; மயிலோ நதிகளைப் போல அருளின் தண்மையையும் கொண்டுள்ளது. ஆகவே தோகையை விரித்து நிற்கும் மயிலுக்கு நதிகளை உவமை சொன்னார்.)

ஆயிரமுக... பல ஆயிரம் கிளைகளாகப் பிரிந்தோடுகின்ற,

தெய்வ நதி... கங்கையைப் போலவும்

காளிந்தி என ... யமுனையைப் போலவும்,

(மயில், தோகையை விரித்திருக்கிறது; நதிகள் கிளைநதிகளை விரித்திருக்கின்றன)

நீழல் இட்டு ... ஒளி வீசுகின்ற (நிழல் என்றால் ஒளி என்றும் பொருளுண்டு. அதனால்தான் ஒளிப்படமான photograph, நிழற்படம் எனப்படுகிறது)

வெண்திங்கள் சங்கு எனவும் ... வெண்ணிலாவை ஒத்திருக்கும் சங்கைப் போலவும்,

ப்ரபா நிகர் எனவும் — திருவாசியைப் போல. மயில் தோகையை விரித்திருப்பது, இதோ மேலே நடராசப்பெருமானைச் சுற்றியுள்ள திருவாசியைப் போல வட்டமாக இருக்கிறது. (படம்: நன்றி விக்கிபீடியா)

எழுதரிய நேமி என ... ஓவியமாக தீட்டுவதற்கு அரிய வட்டவடிவமான சக்கரத்தைப் போலவும் எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும்,

உலகடைய நின்ற மாமுகில் என்னவே ... உலகத்தை அடைத்துக்கொண்டு பரவியிருக்கின்ற பெரிய மேகக்கூட்டத்தைப் போலவும்,

நெடிய முது ககன முகடு ... நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும்,

வீசி நிமிரும் ... தன் தோகையை நிமிர்த்தி வீசியிருக்கும்,

ஒரு ... ஒப்பற்ற,

நீலக் கலாப மயிலாம் ... நீல நிறத் தோகையைக் கொண்ட மயில்

(இத்தகைய மயில் யாருடையது என்று கேட்டால்)

அகரு மரு மணம் வீசு ... அகிலும் மருக்கொழுந்தும் மணம் கமழ்கின்ற,

தணிகை அபிராம வேள் ... திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன், (ரமிக்கத் தகுந்தவன் ராமன், இவன் அபிராமன்—அதற்குமேலும் பேரழகன்)

அடியவர்கள் மிடி அகலவே ... தன்னுடைய அடியவர்களை அடைந்திருக்கும் வறுமை அவர்களை விட்டு நீங்குமாறு,

அடல் வேல் கரத்தசைய ... திருக்கரத்தில் வலிமை நிறைந்த வேலாயுதம் விளங்கவும்,

ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே ... பன்னிரண்டு திருப்புயங்களில் மாலைக் கூட்டங்கள் அசைந்து விளங்கவும்,

மகர கன கோமள குண்டலம் பல அசைய மீன்வடிவத்தில் செய்யப்பட்டதும், கனமான பொன்னாலானதுமான குண்டலங்கள் காதுகளில் அசையவும்,

வல் அவுணர் மனம் அசைய ... கொடிய அரக்கர்களின் மனம் கலங்கவும்,

மால் வரை அசைய ... பெரிய மலையான கிரவுஞ்சம் நடுங்கவும்,

உரகபிலம் அசைய ... பாதாள லோகம் கிடுகிடுக்கவும், (உரகம்: நாகம்; பிலம்: நீண்ட குகை, புற்று, பாதாளம்)

எண் திசை அசைய ... எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும்,

வையாளி ஏறும் மயிலே ... திருமுருகனுடைய பவனிக்காக ஒய்யாரமாகப் புறப்படும் மயிலேதான் அது.

பல சிகரங்களையுடைய மேரு, வெள்ளியங்கிரி போன்ற மலைகளைப் போலவும், பல்லாயிரக்கணக்கான கிளைகளாகப் பிரிந்தோடும் கங்கை, யமுனையாறுகளைப் போலவும், வெண்மையான நிலவை ஒத்த சங்கைப் போலவும், தெய்வத் திருவுருவங்களைச் சுற்றி விளங்கும் திருவாசியைப் போலவும், வட்ட வடிவமாக சக்கரத்தைப் போலவும், உலகம் முழுவதையும் அடைத்துக் கொண்டு பரவியிருக்கும் மேகங்களைப் போலவும் சிறகை உயரமாகவும் பரவலாகவும் விரித்திருக்கிற மயில். இப்படிப்பட்ட மயில் யாருடையது என்றால்,

அகிலும் மருக்கொழுந்தும் மணம் வீசுகின்ற தணிகையில் எழுந்தருளியிருக்கும் பேரழகனும்; அடியவர்களுடைய வறுமை அவர்களை விட்டு நீங்குமாறு திருக்கரங்களில் வேலும், திருத்தோள்களில் மாலைகளும் விளங்க, திருச்செவிகளில் குண்டலங்கள் அசைய, அரக்கர்கள் மனம் கலங்க, பெரிய மலைகள் நடுக்கம் கொள்ள, நாகலோகம் பதற, எட்டுத் திசைகளும் கலங்க, திருமுருகன் பவனிவருவதற்காக ஒய்யார நடை நடைக்கும் மயில்தான் அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.