பகுதி - 82
பொதுவாக, தெய்வ வடிவங்களுக்கு வாகனமும் கொடியும் ஒன்றாக இருக்கும். புறநானூற்றின் முதற்பாடல் இப்படித் தொடங்குகிறது:
பொதுவாக, தெய்வ வடிவங்களுக்கு வாகனமும் கொடியும் ஒன்றாக இருக்கும். புறநானூற்றின் முதற்பாடல் இப்படித் தொடங்குகிறது:
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
Advertisement
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப
சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் மாலையும் கொன்றை; மார்பிலணிந்திருக்கும் மாலையும் கொன்றை. அவருடைய வாகனமும் வெண்மையான ஏறு (நந்தி); கொடியும் அதே ஏறுதான். பெருந்தேவனார் பாடிய இப்பாடல் இப்படிப் பல ஒற்றுமைகளை எடுத்துச் சொல்கிறது. இதுபோன்றே திருமாலுக்கு வாகனமும் கருடன்; கொடியும் கருடக் கொடி.
இவை இவ்வாறிருக்க, முருகனுடைய வாகனமும் கொடியும் மாறுபடுவதை அறிவோம். மயிலைத் தவிர முருகனுக்கு ஆடும் யானையும் வாகனங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பழைமையான வாகனம் யானையே என்பார்கள். இந்திரனுடைய வாகனமான யானை முருகனுக்கும் வாகனமாக இருந்ததைக் கந்தபுராணம் சொல்கிறது. இதைப் பற்றி விரிவாகப் பேச வேறொரு சந்தர்ப்பம் அமையும். வாகனத்தில் வேறுபாடு இருந்தாலும், முருகனுடைய கொடி, கோழிக் கொடியாகவே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. முருகனுடைய கோழிக் கொடியைப் பற்றிய பழைய குறிப்பு திருநாவுக்கரச சுவாமிகள் பாடலில் காணப்படுகிறது:
கோழிக் கொடியோன்தன் தாதை போலும்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
என்று திருஇன்னம்பர் திருத்தாண்டகத்தில் பாடுகிறார்.
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
என்று திருமுருகாற்றுப் படை பாடுகிறது. மஞ்ஞையன்: மயிலை வாகனமாக உடையவன்; சேவலங் கொடியன்: சேவலைக் கொடியாக உடையவன்.
எனவே முருகனுக்கு மற்ற வாகனமும் சேவற்கொடியும் மிகப் பழைய இலக்கியங்களிலேயே குறிப்பிடப்படுபவை. வாகனம் மாறினாலும், கொடி எப்போதுமே சேவற்கொடியாகத்தான் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இந்தச் சேவலைப் பற்றி அருணகிரிநாதர் இயற்றிய பத்துப் பாடல்களடங்கிய தொகுப்பே சேவல் விருத்தம் எனப்படுகிறது. இதற்கும் ஒரு காப்புச் செய்யுளும் ஒரு பலச்ருதியும் உண்டு. இன்று காப்புச் செய்யுளைப் பார்ப்போம். ராவணன் சிவ பூசை செய்ததையும், லிங்கத்தை எடுத்துச் சென்றதையும் இந்தப் பாடலில் சொல்கிறார்:
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம்பெறுபொற்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டா கியகய
மாமுக னைக்கோறி
வன்கோ டொன்றை ஒடித்துப் பாரதம்
மாமே ருவிலெழுதிப்
பைந்தார் கொடுபல ராவணன் அன்பொடு
பணிசிவ லிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/236587363&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>