பகுதி - 86
சேவல் விருத்தத்தின் இரண்டாம் பாடலிலும் பேய் பிசாசுகளின் பயத்தை அறவே ஒழிக்கும் என்ற மொழி தொடர்கிறது.
சேவல் விருத்தத்தின் இரண்டாம் பாடலிலும் பேய் பிசாசுகளின் பயத்தை அறவே ஒழிக்கும் என்ற மொழி தொடர்கிறது. வண்ணவிருத்தமாக இல்லாமல் சந்த விருத்தமாக ஓடினாலும், இதன் நடையில் சண்டைச் சேவல் துள்ளித் துள்ளிப் பறப்பதும் பறந்து அடிப்பதும்போன்ற ஓசைநயம் ஒலிக்கக் கேட்கலாம். இப்போது பாடலைப் பார்ப்போம். முதல் அடியிலேயே வியன் நவிரம் என்பதைப் போன்ற சொற்கள் வந்து விழுகின்றன. இவற்றின் பொருளை விரிவாக நாளைக்குக் காண்போம்.
எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
Advertisement
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
கரத்தடர்த் துக்கொத் துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர்கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
சரணஅழ கொடுபுரி யும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவற் றிருத்து வசமே
</p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/236902174&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p> </p>